மதுக்கூரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்ய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப் பட்டுள்ளவாறு சிறப்பு முகாம்கள் வருகிற 21, 22 ஆகிய தேதிகளிலும், அடுத்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளிலும் கீழே அட்டவணையில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெறும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மேற்குறிப்பிட்ட நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் பிழை இருப்பின், படிவம் எண் 8 பூர்த்தி செய்து வழங்கலாம். இறந்த மற்றும் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் படிவம் எண் 7 மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடிபெயர்ந்த வாக்காளர்கள் படிவம் எண் 8 ஏ பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். டிசம்பர் 15-ந் தேதி வரை மேற்படி கேட்புரிமம் மற்றும் ஆட்சேபனை தொடர்பான விண்ணப்பங்களை வாக்காளர்கள் வழங்கலாம். மேலும் https://www.nvsp.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.

வரைவு வாக்காளர் பட்டியலின் நகல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக டிசம்பர் 15-ந்தேதி வரை வைக்கப்படும். தஞ்சை மாவட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

1-1-2003-ந்தேதிக்கு முன்னர் பிறந்த தகுதியுடைய மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் எண்-6ஐ அந்தந்த வாக்குச்சாவடிகளில் கேட்டுப்பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆதார் ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தினை படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கலாம்.

தேவையான ஆவணங்கள்:


முகவரி சான்று:

  • பாஸ்போர்ட்
  • கேஸ் பில்
  • தண்ணீர் வரி ரசீது
  • ரேசன் அட்டை
  • வங்கி கணக்கு புத்தகம்
  • ஆதார் கார்டு

வயது சான்று:

  • பத்தாம் வகுப்பு சான்றிதழ்
  • பிறப்பு சான்றிதழ்
  • பான் கார்டு
  • ஆதார் கார்டு
  • ஓட்டுநர் உரிமம்
  • பாஸ்போர்ட்
  • கிசான் சான்று

அடையாள சான்று:

  • பான்கார்டு
  • ஓட்டுநர் உரிமம்
  • ரேசன் கார்டு
  • பாஸ்போர்ட்
  • வங்கி கணக்கு புத்தகம்
  • பத்தாம் வகுப்பு சான்றிதழ்
  • மாணவர் அடையாள அட்டை
  • ஆதார் கார்டு

மேற்கண்ட 3 ஆவணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் கொண்டு செல்லவும். மேலும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.