திருமக்கோட்டை
பொன்னுக்கண்ணு வேதாம்பாள் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர் மோனிஷா. பத்தாம் வகுப்பில் 500-க்கு 483 மதிப்பெண்களும், பனிரெண்டாம் வகுப்பில் 600-க்கு 557 மதிப்பெண்களும் பெற்று மாவட்ட அளவுல அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்தார். எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் நீட் கோச்சிங் கிளாஸ் போக வசதியில்ல. ஆனாலும் அவருடைய கணித ஆசிரியர் 5,000 ரூபாய் பணம் கட்டி கோச்சிங் கிளாஸில் சேர்த்துவிட்டு இருக்கிறார். அப்போது கொரோனா காலம் என்பதால் ஆன்லைனில் தான் கிளாஸ் அட்டண்ட் பண்ணியிருக்கிறார்.

அவருடைய அப்பா விவசாயி, அம்மாவுக்குக் கொஞ்சம் கால் சுகமில்லாமல் இருப்பதால் வீட்டில் ஆடு, மாடுகளைப் பார்த்துக்கொண்டு மாலை 6 மணிக்கு மேல படிக்கக்கூடிய சூழ்நிலை. நீட் தேர்வில் 257 மார்க் கிடைத்துள்ளது. தனக்கு மெடிக்கல் சீட் கிடைக்காது என நினைத்து வேறு ஏதாவது படிக்கலாம் என முடிவு செய்த நிலையில் தமிழக அரசு கொண்டு வந்திருக்கின்ற இட ஒதுக்கீட்டில் இப்போ இவருக்கு சீட் கிடைத்துள்ளது. நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களில் 37-வது இடம் வாங்கிய இவர் கவுன்சிலிங்கில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

ஊர் மக்கள் என்னைத் தேடி வந்து வாழ்த்துச் சொல்லிக்கிட்டு இருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார். அதே சமயம் நாம் அந்த கணக்கு வாத்தியாரையும் மறந்து விடக்கூடாது.