வங்கக்கடலில்
சென்னைக்கு தென்கிழக்கே 1050 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைபெற்றுள்ளது. பின்னர் அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைபெற்று, புயல் சின்னமாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இப்புயலுக்கு #நிவார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னம் வரும் 25ம் தேதியன்று மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரைக்கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புயல் எச்சரிக்கையை அடுத்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வரும் 25ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு  ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னெச்சரிக்கை:

எனவே தமிழக கடற்கரை மாவட்டகளில் உள்ள மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

மேலும் மீனவர்கள் அடுத்த சில நாட்களுக்கு வங்க கடலுக்கு செல்லவேண்டாம். சென்றவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கரையை அடைந்து விடுங்கள்.

பழுதான மின் இணைப்புகளை சரி செய்து கொள்ள வேண்டும் அல்லது துண்டித்துவிடுங்கள்.

குடிசை மற்றும் மண் வீடுகளில் இருப்பவர்கள் மிக மிக எச்சரிக்கையுடன் இருங்கள்.

குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் போன்ற அவசிய பொருட்களை இரண்டு மூன்று தினங்களுக்கு தேவையான அளவு  வைத்துக்கொள்ளுங்கள்.

ஆடு, மாடு, எருமை போன்ற கால்நடைகள் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

பழுதான பாலங்கள் மற்றும் தரைபாலங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

குளம், குட்டைகளில் ஏற்பட்ட நீர் வழி அடைப்புகளை  சரிசெய்துக்கொள்ளுங்கள்.

மின்சாதனங்களை சரியாக வைத்துக்கொள்ளுங்கள்.

கொரோனா காலம் என்பதால் அரசு பாதுகாப்பு மையங்களில் தங்குவோர் தேவையான முன்னெச்சரிக்கைகளை பெற்று கொள்ளுங்கள்.

அரசின் மாவட்ட அவசர தொலைபேசி எண்களை வைத்துக்கொள்ளுங்கள்.